கடலூர் மாவட்டம் திட்டக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான காவல் துறையினர் வதிஷ்டபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு 1 கிலோ 100 கிராம் கஞ்சா வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த அரசன் மகன் ஆங்கி என்கிற ராதாகிருஷ்ணன் என்பவரை கைது செய்தனர்.
கைதான ராதாகிருஷ்ணன் மீது திட்டக்குடி காவல் நிலையத்தில் சரித்திர குற்ற பதிவேடு பராமரிக்கப்படுகிறது. மேலும் அவர் மீது திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் 6 கஞ்சா வழக்குகளும், வழிப்பறி, சூதாட்ட வழக்குகள் என மொத்தம் 10 வழக்குகள் உள்ளன. இதனால் ராதாகிருஷ்ணனின் தொடர் குற்றசெயலை கட்டுப்படுத்தும் வகையில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தவருடையான ஆங்கி என்கிற ராதாகிருஷ்ணனிடம் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.