கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் மற்றும் சுற்றுலா மாளிகை கட்டுமானப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் 35.18 ஏக்கர் பரப்பளவில் 139 கோடியே 41 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 8 தளங்களுடன் கலெக்டர் அலுவலக கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. கலெக்டர் அலுவலக கட்டுமானப் பணிகளை கலெக்டர் பிரசாந்த் நேற்று ஆய்வு செய்தார்.
ஆய்வில், கட்டுமான பணிகளுக்கு தரமான பொருட்களை கொண்டு கட்டி முடித்து விரைவாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, பிரதிவிமங்கலத்தில் 6 கோடியே 99 லட்சம் மதிப்பீட்டில் புதிய சுற்றுலா மாளிகை கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது பொதுப் பணித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.