திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி, செங்கம் நகரில் இயங்கி வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் அமைய உள்ள இடத்தினை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ.கிரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின்போது, செங்கம் தேர்வுநிலை பேரூராட்சி மன்ற தலைவர் சாதிக்பாஷா ஒன்றிய கழக செயலாளர் செந்தில்குமார், மு. கூட்டுறவு சங்க தலைவர் முருகன், நகர நிர்வாகிகள் பழக்கடை பாலு மணி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.