கார்த்திகை மாதம் தேய்பிறை சிவராத்திரி தினத்தில் குபேர பெருமான் கிரிவலம் நடைபெறும். இந்த நாளில் பக்தர்களும் கிரிவலம் செல்வர். அதன்படி, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள குபேர லிங்க சந்நிதியில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் மற்றும் அஷ்டலிங்க சந்நிதிகளில் வழிபட்டனர். குபேர கிரிவலம் என்பதால், வழக்கத்தைவிட குபேரலிங்க சந்நிதியில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.