திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சி. கெங்கம்பட்டு ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை கலசப்பாக்கம் எம்எல்ஏ பெ. சு.தி சரவணன், யூனியன் சேர்மன் சி. சுந்தரபாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினர்.
உடன் ஒன்றிய குழு துணைத் தலைவர் சசிகலா உதயசேகரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.