
திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில், கார்த்திகை தீபத் திருவிழாவின் தொடக்க விழாவான ஊர் காவல் தெய்வம் ஸ்ரீ துர்க்கை அம்மன் உற்சவத்தை முன்னிட்டு, நேற்று (டிச. 1) துர்க்கை அம்மன் கோயிலில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நேற்று இரவு துர்க்கை அம்பாள் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி மாடவீதி உலா நடைபெறும்.