திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பொதுப்பணிகள், கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ வேலு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் திருக்கோவிலூர் சாலையில் உள்ள மகிரஷி பள்ளியில் கனமழையால் சிக்கி கொண்ட காவலாளியை மீட்க ஆலோசனை வழங்கி பணியை துரிதப்படுத்தினார்.
இந்த ஆய்வின்போது திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி, முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.