திருவண்ணாமலை மாநாகராட்சிக்குட்பட்ட வ.உ.சி தெருவில் ஃபெஞ்சல் புயலின் காரணமாக நிலச்சரிவில் சிக்கிய 7-நபர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் பணிகள் துறையினருடன்தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு, மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கரபாண்டியன்., அவர்களுடன் மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி,மாநில மருத்துவரணி துணை தலைவர் எ. வ. வே. கம்பன்., திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.