உளுந்தூர்பேட்டையில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட 207 குடும்பத்திற்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி உளுந்தூர்பேட்டை டோல்கேட் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
இந்த நிவாரண உதவிகள் பெறுவதற்கு தயாரிக்கப்பட்ட பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதில் போர்வை, அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட 20 வகையான பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டன.
முதல்வர் விழுப்புரத்தோடு திரும்பி சென்றதால், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலையில் கலெக்டர் பிரசாந்த் 207 பயணாளிகளுக்கு ரூபாய் 20 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பில் நிவாரண உதவிகளை வழங்கினார்.