திருவண்ணாமலை மத்திய மாவட்டம், போளூர் சட்டமன்றத் தொகுதி, சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றியம், ஓதலவாடி முதல் சதுப்பேரி செல்லும் சாலையில், செய்யாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தரைப்பாலம் ஃபெஞ்சல் புயலால் பெய்த கனமழையால் தரைப்பாலம் மற்றும் தடுப்புச்சுவர் அடித்துச் செல்லப்பட்டது.
போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி மற்றும் திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழக செயலாளர், ஜெயசுதா லட்சுமிகாந்தன் நேரில் சென்று பார்வையிட்டு பொதுமக்கள் மறறும் விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர். உடன், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக செயலாளர்கள், மாவட்ட சார்பணி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், ஊராட்சி மன்றத் தலைவர் உடன் இருந்தனர்.