கடலூர் மாவட்டம் திடீர் குப்பம் பகுதியில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைப் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 500க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்து, பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது குறித்து, திமுக அரசு மக்களுக்கு எந்த முன்னெச்சரிக்கையும் வழங்காததால், தாங்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியிருப்பதாகப் பொதுமக்கள் வருத்தத்துடன் குற்றஞ்சாட்டினர்.
புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய அனைத்து நிவாரண உதவிகளையும் பெற்றுத் தர, தமிழக பாஜக சார்பாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்று அவர்களுக்கு உறுதி அளித்தார்.