கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சாலையில் அன்னை தெரசா நகர்ப் பகுதி உள்ளது. இப்பகுதியில் அமைந்துள்ள காய்கறி, மளிகை கடைகளில் தங்களுக்கு தேவையான பொருட்களைப் பணம் கொடுத்துக் கேட்டால் கூட கடைக்காரர்கள் மறுப்பதாக நரிக்குறவர் சமூக மக்கள் புகார் கூறினர். அதுமட்டுமின்றி திடீரென் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். பின் அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.