
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஒன்றியம், எலத்தூர் கிராமத்தில் மழையால் வீடு இழந்த குடும்பத்தினருக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான பெ. சு.தி. சரவணன் நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் கூறினார். உடன் கலசபாக்கம் ஒன்றிய செயலாளர்கள் சிவகுமார், வழக்கறிஞர் சுப்பிரமணி, ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகர், அரசு அதிகாரிகள் , திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
