
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8 ஆம் ஆண்டு நினைவு நாளான 5. 12. 2024, வியாழக்கிழமை அன்று கடலூர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள கழகத்தில் அனைத்து நிலைகளில் பணியாற்றி வரும் அதிமுக நிர்வாகிகள் சிதம்பரம் வண்டிகேட்டில் உள்ள ஜெயலலிதா திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், மற்றும் ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளைக் கழகம், வார்டு கழகம் தோறும் ஜெயலலிதா திருவுருவப் படங்களை வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, அன்னதானம் செய்து நினைவஞ்சலி நிகழ்ச்சியினை நடத்த வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
