கடலூர் மாவட்டம் திட்டக்குடி சிறுபாக்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 30 வயது இளம்பெண் மனநலம் பாதிக்கப்பட்ட இவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடனே உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக கழுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு இளம்பெண்ணை பரிசோதித்த மருத்துவர் இளம்பெண் 6 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சிறுபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுபாக்கம் அடுத்த கச்சிமயிலூரை சேர்ந்த வெள்ளையன் என்பவர் இளம்பெண்ணை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வெள்ளையனை கைது செய்தனர்.