கள்ளக்குறிச்சி வட்டாரம், ஈயனூர் கிராமத்தில் பெஞ்சல் புயல் காரணமாக சேதம் அடைந்துள்ள பப்பாளி சாகுபடி வயலினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மதுசூதன ரெட்டி ஆகியோர் நேரில் பார்வையிட்டு சேத விவரங்கள் குறித்து கேட்டறிந்தனர்.
அப்போது சேதமடைந்த பயிர்களை ஆய்வு செய்து, விரைவில் கணக்கெடுப்பு பணிகள் முடித்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகளை உடனடியாக வழங்கிடுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.