
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டு ஊராட்சியில் அருள்மிகு ஸ்ரீ முத்து விநாயகர் திருக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.