
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி புதுப்பாளையம் ஒன்றியம் பெரியேரி கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணியை ஊராட்சி திட்ட இயக்குனர் மணி இன்று ஆய்வு மேற்கொண்டார். உடன் புதுப்பாளையம் ஒன்றிய குழு தலைவர் சி. சுந்தரபாண்டியன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளும் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.