கோக்கு மாக்கு
Trending

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

கனமழையில் பாதிக்கப்பட்ட விவசாய விளைநிலங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பெஞ்சல் புயல் காரணமாக கனமழையில் விவசாய விளைநிலங்கள் பாதிக்கப்பட்டன.

வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்கள் மூலம் பயிர் சேத பாதிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன.இந்நிலையில் நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குனருமான மதுசூதன் ரெட்டி, கலெக்டர் பிரசாந்த் முன்னிலையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழையால் சேதமடைந்த பயிர்களை நேரில் பார்வையிட்டு நேற்று ஆய்வு செய்தார்.

அதில் சித்தலுார், மடியனுார், பாசார் ஆகிய கிராமங்களில் பருத்தி, உளுந்து, மரவள்ளிக்கிழங்கு வயல்களை பார்வையிட்டு சேதவிவரங்கள், பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.தொடர்ந்து சேத பாதிப்பு கணக்கெடுப்பு மற்றும் நிவாரண உதவிகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அதில் நெல், சிறுதானிய வகைகள், பயிறு வகைகள், எண்ணெய் விதைகள், பருத்தி மற்றும் கரும்பு ஆகிய பயிர்கள் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 856 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டதில், 50 ஆயிரத்து 314 ஹெக்டேர் பரப்பளவு விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், கனமழையில் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்கள் கணக்கெடுப்பு பணிகள் தொடர்ந்து நடக்கின்றன என்று அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button