
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் பாதிப்புகள் ஏற்பட்டது. இந்த நிலையில் விருத்தாசலம் நகரமன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் உணவு மற்றும் உடை வழங்கினார். இது மட்டும் இல்லாமல் முகாமில் தங்கியுள்ள 102 பேருக்கு நிவாரண உதவி வழங்கினார். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.