ஃபென்ஜால் புயல் காரணமாக பலத்த மழை பெய்ததால் திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே கொங்கராம்பட்டு பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து அறிந்த தொகுதி எம்எல்ஏ சேவூர் எஸ். ராமச்சந்திரன் அங்கே சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் என நிவாரண உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் அதிமுக ஒன்றியச் செயலர்கள் திருமால், ஜெயபிரகாஷ், கண்ணமங்கலம் பேரூராட்சி செயலர் பாண்டியன், அப்பகுதியைச் சேர்ந்த ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஆ. வேலாயுதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.