
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கப்பலூர் ஊராட்சியில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கலசப்பாக்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக மாநில வர்த்தக அணி இணை செயலாளருமான வி. பன்னீர்செல்வம் பங்கேற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். உடன் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் பொய்யாமொழி உள்ளிட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.