
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அடுத்த லால்பேட்டை வீராணம் ஏரி 47.50 அடி கொள்ளளவு கொண்ட ஏரியில் தற்போது நீர் வரத்து அதிகமாக உள்ளதால் கடல் போல் காட்சியளிக்கிறது.இந்த நிலையில் வீராணம் ஏரியில் இருந்து சென்னை மக்கள் மற்றும் ஏராளமான விவசாயிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக தொடர்ந்து விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.