வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெனி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த நான்கு நாட்களாக பரவலாக கனமழை பெய்தது. இந்த நிலையில் கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.
வழக்கமாக தமிழ் மாதங்களான கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் பனிப்பொழிவு இருக்கும். மழை காரணமாக ஒரு வாரமாக காணப்படாத பனிப்பொழிவு தென்பட்டது. இதனால் வாகனங்கள் முன்புறப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.