கள்ளக்குறிச்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கடலூர் மாவட்டத்திற்கு பெஞ்சல் புயல், வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ததால் பெருத்த சேதம் ஏற்பட்டது.
கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பிற மாவட்டங்களிலிருந்து நிவாரண உதவிகள் அனுப்பப்பட்டு வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து 5,700 கிலோ அரிசி, 1,100 கிலோ துவரம் பருப்பு, 1,100 கிலோ சர்க்கரை, 1,100 லிட்டர் சமையல் எண்ணெய், 1,100 கிலோ உப்பு, 90 கிலோ மிளகாய்த் தூள், 90 கிலோ மல்லித்தூள், 90 கிலோ சம்பாரத்தூள்,90 கிலோ மசாலாத்தூள், 90 கிலோ கடுகு, 90 கிலோ சீரகம், 90 கிலோ மிளகு, 90 கிலோ மஞ்சள் தூள், 90 கிலோ வெந்தயம், 90 கிலோ தேநீர்த்தூள், 900 கிலோ கோதுமை மாவு, 450 கிலோ புளி, தீப்பெட்டி, காப்பித்தூள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவிப் பொருட்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு கடலூர் மாவட்டத்திற்கு லாரி மூலம் கலெக்டர் பிரசாந்த் அனுப்பி வைத்தார்.