கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த எலவடியைச் சேர்ந்தவர் ராஜா, (39); காளசமுத்திரம் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வந்தார்.இவர், கடந்த 2019-2022ம் ஆண்டு எலவடியில் ஊராட்சி செயலராக இருந்தபோது, பொது நிதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு நிறுவனத்திற்கு பணம் அளிக்காமல் முறைகேடாக தனி நபர் வங்கி கணக்கிற்கு பணம் அளித்துள்ளது தணிக்கையில் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, சின்னசேலம் பி.டி.ஓ., சவரிராஜ், ஊராட்சி செயலர் ராஜாவை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார்.