கோக்கு மாக்கு
Trending

முதல்வர் மருந்தகத்திற்கு விண்ணப்பிக்க அவகாசம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க, வரும் 10ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் செய்திக்குறிப்பு: பொதுமக்களுக்கு குறைந்த விலையில் ஜெனரிக் மருந்துகள் மற்றும் பிற மருந்துகள் கிடைக்கும் வகையில், முதல்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

அதன்படி, மாவட்டத்தில் பி.பார்ம்., டி.பார்ம்., சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் விருப்பமுள்ளவர்கள முதல்வர் மருந்தகம் அமைக்கலாம் எனவும், இதற்காக www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று 30ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனஅறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பொதுமக்கள் நலன் கருதி விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button