
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, ஜவ்வாதுமலை ஒன்றியத்திற்குட்பட்ட, கல்லாத்தூர் ஊராட்சி தொட்டிமடுவு பகுதியில் ரூ. 4 கோடி மதிப்பீட்டில், புதியதாக கட்டப்பட்டு வரும் மேம்பால பணியினை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி பார்வையிட்டு விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு வர ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர்கள் சிவ சேமன், செந்தில்குமார், கல்லாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் சிவானந்தம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
