கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் தெற்கு தெருவை சேர்ந்த செந்தாமரை கண்ணன் வயது 42 த வேப்பூர் வட்டம் என். நாரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கடையமுத்து வயது 42 செந்துறை வட்டம் சிவன் கோயில் தெருவை சேர்ந்த அன்பரசன் வயது 52, வேப்பூர் வட்டம் ஏ அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தென்னரசு வயது 28 ஆகியோரது செல்போன்கள் தொலைந்துபோனது.
இது பற்றி வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். புகாரின் பேரில் செல்போன்களை கண்டுபிடித்து காவல் ஆய்வாளர் சசிகலா மற்றும் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மேற்கண்ட நபர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தனர். உடன் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராஜா, காவலர் தரணி இருந்தார்.