பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி அண்ணாகிராமம் ஒன்றியம் பைத்தான்பாடி ஊராட்சி சத்திரம் நியாய விலை கடையில் ஃபெஞ்சல் காரணமாக மழை மற்றும் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட 645 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண உதவித் தொகை ரூ.2000 அரிசி, பயறு போன்ற அத்தியாவசிய பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கும் பணியினை தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ. கணேசன் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் சரண்யா, அண்ணாகிராமம் ஒன்றியக் கழகச் செயலாளர் தலைமை செயற்குழு உறுப்பினர் வி.கே. வெங்கட்ராமன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.