திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசந்திரசேகரர் உற்சவர் சுவாமிகளும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் 3-ஆவது நாளான நேற்று காலை 10 மணிக்கு மூஷிக வாகனத்தில் ஸ்ரீவிநாயகர், பூத வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரர் வீதியுலா நடைபெற்றது. இரவு 10 மணிக்கு சிம்ம வாகனத்தில் ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரர், வெள்ளி அன்ன வாகனத்தில் ஸ்ரீபராசக்தியம்மன் மற்றும் வெவ்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம், அறங்காவலர் குழுவினர், உபயதாரர்கள் செய்திருந்தனர்