
கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் பள்ளியில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.அதே போல், மைத்திரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, உதவி தலைமையாசிரியர் வசந்தா தலைமை தாங்கினார். அதே போல் மாவட்ட வள ஆதார மைய ஒருங்கிணைப்பாளர் ராமு வரவேற்றார். கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நிரஞ்சனா ஆகியோர் பேசினர்.