
கடலூர் மாவட்டம் நெய்வேலி மேற்கு ஒன்றிய பாமக ஆய்வு கூட்டம் நெய்வேலி மேற்கு ஒன்றிய துணைச்செயலாளர் முருகவேல் தலைமையில் எலவத்தடி கிராமத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில அமைப்பு செயலாளர் தருமபுரி சண்முகம், தென்காசி மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் இரா. ரவிச்சந்திரன் ஆகியோர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.