
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நரசிங்க மங்கலத்தை சேர்ந்த பொதுமக்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.அந்த மனுவில் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த நாங்கள் எங்கள் கிராமத்தில் நிரந்தரமாக வசித்து வருகிறோம் என்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளோம் என்றும் எங்களுக்கு தமிழக அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.