கள்ளக்குறிச்சியில் பதிவுத்துறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மகாலிங்கம், துணை தலைவர் ரவி, கள்ளக்குறிச்சி சார்பதிவாளர் பாரதி உள்ளிட்ட அனைத்து பிரிவு அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் சார்பதிவாளர் அலுவலகத்தில், சார்பதிவாளர் மீது மண்ணெண்ணை ஊற்றி, கொலை செய்ய முயற்சி செய்யப்பட்டது. அத்துடன் மதுரை மாவட்டம் பேரையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், பத்திரத்தை பதிய மறுத்த சார்பதிவாளரை, ஒரு நபர் தாக்கியதில், அவரது மண்டை உடைந்தது. இந்த இரண்டு சம்பவங்களைத் தொடர்ந்து பத்திரப்பதிவுத்துறை அலுவலர்களுக்கு பணியிடத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.