ஆழ்வார்குறிச்சி அருகே ரயில்வே சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரால் தனித்தீவான கிராமம்சவப்பெட்டி கொண்டு செல்ல வழி இல்லாமல் ரயில்வே தண்டவாளத்தில் கொண்டு சென்ற மக்கள் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செங்கனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த கிராமத்திற்கு செல்லும் வழியில் நெல்லை – செங்கோட்டை ரயில்வே சுரங்க பாதை உள்ளது.இந்த பாதையில் சிறிதளவு மழை பெய்தாலே தண்ணீர் தேங்கும் அவல நிலை நீடிக்கிறது.இந்த கிராம மக்கள் அடிப்படை தேவைக்கு இந்த சுரங்க பாதையை கடந்து ஆழ்வார்குறிச்சிக்கு செல்லும் நிலை உள்ளது. தற்போது பெய்த மழையால் இரண்டு நாட்களாக சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கியுள்ளது.பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மோட்டார் மூலம் நீரை வெளியேற்றி வருகின்றனர்.தொடர்ந்து சுரங்க பாதையை சுற்றி ஊற்று இருப்பதனால் தண்ணீர் ஊறிக் கொண்டே உள்ளது.இதனால் தண்ணீரை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனால் அந்த கிராம மக்கள் தொடர்ந்து வெளியேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அங்கு 105 வயதான கனியம்மாள் என்ற மூதாட்டி ஒருவர் தற்போது உடல்நல குறைவால் காலமாகியுள்ளார். சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கி கிடப்பதால் சவப்பெட்டியை அந்த வழியாக கொண்டு செல்ல முடியாமல் மிகவும் சிரமத்துடன் ரயில்வே தண்டவாளத்தை கடந்து கொண்டு சென்றனர்.இந்த கிராம மக்கள் மாற்று பாதை கோரி பல்வேறு கட்ட போராட்டங்கள் ரேஷன் அட்டை ஆதார் அட்டை ஆகியவற்றை ஒப்படைக்கும் போராட்டத்தையும் நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Read Next
19 hours ago
2006 வழக்கு…! 12 பேரின் விடுதலைக்கு..! உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை..!
2 days ago
அரசுப் பேருந்துகளில் மட்டுமே அனுமதி – வனத்துறை அறிவிப்பு…!
3 days ago
காட்டுப்பன்றியை வேட்டையாட முயன்ற 8 பேருக்கு ரூ 60,000 அபராதம்
3 days ago
வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது
3 days ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
5 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
6 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
6 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
7 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
7 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
Related Articles
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திட்ட பணி கலெக்டர் கள ஆய்வு
September 20, 2024
வியாபாரியை வழிமறித்து படுகொலை
April 23, 2024
Check Also
Close
-
மதிமுக சார்பில் பிரபாகரனின் பிறந்த நாள் விழாNovember 27, 2024