கோக்கு மாக்கு
Trending

நாயன்மார்களை சுமந்து மாணவர்கள் வீதி உலா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடக்கிறது.

இந்நிலையில் நேற்று 6ம் நாள் விழா நடைபெற்றது.இதையொட்டி காலை 10 மணி அளவில் வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், கண்ணாடி ரிஷப வாகனத்தில் அம்பாளுடன் சந்திரசேகரரும் சிறப்பு அலங்காரத்தில் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத தில் எழுந்தருளினர்.

தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க விநாயகரும், அம்பாளுடன் சந்திரசேகரரும் பக்தர்கள் வெள்ளத்தில் கோவில் மாடவீதியை சுற்றி வந்து அருள் பாலித்தனர். மாடவீதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளின் அருகே சாமி வந்ததும் பலர் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

இரவு உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் வெள்ளி பெரிய ரிஷப வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோவில் மாடவீதிகளை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று 63 நாயன்மார்கள் வீதி உலா துவங்கியது. பள்ளி மாணவர்கள் நாயன்மார்களை சுமந்து மாடவீதியை சுற்றி வலம் வந்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button