திண்டுக்கல் மாவட்டம் , சிறுமலையில் சட்டவிரோத தனியார் தங்கும் விடுதியினரின் அட்டகாசம் – சுற்றுலா வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் மீது கொலை வெறி தாக்குதல் – த காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? எதிர்பார்ப்பு

மதுரை கருமாத்துரை சேர்ந்த ஒரே குடும்ப உறுப்பினர்கள் ( அம்மா , மகள் ,மகன் உட்பட 7 பேர் ) திண்டுக்கல் சிறுமலைக்கு சுற்றுலாவிற்கு வந்தனர். இந்நிலையில் சிறுமலையில் உள்ள HAPPY HOME என்ற தனியார் தங்கும் விடுதியின் அருகே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது விடுதியை சேர்ந்த நபர்கள் அங்கு சாப்பிடக்கூடாது என்று கூறி தகராறில் ஈடுபட்டனர் . எதற்காக இங்கு சாப்பிட கூடாது என கூறுகின்றீர்கள் என சுற்றுலா வந்த குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர் .
இதனைத் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் விடுதி தரப்பில் பத்துக்கும் மேற்பட்டோர் ஒன்று சேர்ந்து பெண் என்று பாராமல் 7 பேர் மீதும் கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டு அவர்கள் வந்த காரின் கண்ணாடியை உடைத்தனர்.
சமீபத்தில் தான் கேரளாவை சேர்ந்த நபர் ஒருவர் மர்மமான முறையில் டெட்டனேட்டர் வகை வெடி பொருள் வெடித்து இறந்து கிடந்தார்.
சிறுமலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வரும் அதே வேலையில் இது போன்ற சட்டத்திற்கு புறம்பாக நடத்தப்படும் தங்கும் விடுதிகளாால் நாள்தோறும் குற்ற எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அனைத்து துறை அதிகாரிகளும் கண்டும் காணாமல் இருப்பதாக உள்ளூர் மக்கள் புலம்பி வருகின்றனர்.
ச
இது சம்பவம் குறித்து சிறுமலை வனத்துறையினர் மற்றும் தாலுகா துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட தரப்பினர் , உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.