ஆரணி நகரம், கொசப்பாளையம் தனியார் மண்டபத்தில் பாமக ஆலோசனை மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
டிசம்பர் 21 அன்று திருவண்ணாமலை சந்தை மேட்டில், பல்வேறு வேளாண் பிரச்னைகளை முன்வைத்து தமிழ்நாடு உழவர் பேரியக்க மாபெரும் மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு ஆரணி நகரம், கொசப்பாளையம் தனியார் மண்டபத்தில் கலந்தாய்வு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஆரணி நகரம் 1, ஆரணி நகரம் 2 சார்பில் ஆலோசனை மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் நகரச் செயலாளர் ந. சதீஷ்குமார் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சு. ரவிச்சந்திரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக பாமக மாவட்ட செயலாளர் ஆ. வேலாயுதம் சிறப்புரையாற்றினர்.
உடன் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் அ. கருணாகரன், மாநில செயற்குழு உறுப்பினர் பிச்சாண்டி, மாவட்ட துணைச் செயலாளர் வடிவேல், மாவட்ட அமைப்புத் தலைவர் ஏ. கே. ராஜேந்திரன், வன்னியர் சங்க நகர செயலாளர் ராஜாமணி, நகரத் தலைவர்கள் சேட்டு, செல்வரசு, ஒன்றியச் செயலாளர் பெருமாள், ஒன்றிய தலைவர் ரவிவர்மன் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.