திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த அணியாலை கிராம காலனியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இந்நிலையில், ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் காலனி மக்களுக்கு என தனியாக மேல்நிலை தேக்க தொட்டி அமைத்து குடிநீர் விநியோகம் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக குடிநீர் கலங்களாகவும், தூய்மையாக இல்லாமலும் குழாய்களில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து டேங்க் ஆபரேட்டரிடம் கூறியும் பயனில்லை என்கின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை அப்பகுதி மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்காத ஊராட்சி மன்ற நிர்வாகத்தைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.பின்னர் போலீஸார் ஊராட்சி மன்றத் தலைவர் வசந்தகுமாரிடம் தகவல்தெரிவித்து ஊராட்சி சார்பில் உடனடியாக சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் மறியலை பொதுமக்கள் கைவிட்டு கலைந்துசென்றனர்.