
செய்யாறு தொகுதிக்குள்பட்ட அனக்காவூர் ஒன்றியம் எச்சூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மாவட்ட ஊராட்சிக் குழு 15-ஆவது மத்திய நிதிக் குழு மூலம் ரூ. 5 லட்சத்தில் புதிய நெற்களம், கனிமவள நிதி மூலம் ரூ.15 லட்சத்தில் அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் சார்பில் ரூ. 10.70 லட்சத்தில் நியாயவிலை கடைக்கு புதிய கட்டடம், ரூ. 32.80 லட்சத்தில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் ஆகியவை கட்டப்பட்டு தயார் நிலையில் இருந்தன.
இந்த கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கும் நிகழ்ச்சி அந்தந்தப் பகுதிகளில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அனக்காவூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமை வகித்தார்.
மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனுவாசன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் குப்புசாமி, இந்திராணி வரவேற்றார்.இதில் சிறப்பு விருந்தினராக செய்யாறு ஒ. ஜோதி எம்எல்ஏ பங்கேற்று நெற்களம், அங்கான்வாடி மையம், நியாயவிலைக் கடை கட்டடம், தொடக்கப்பள்ளிக்கான புதிய கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.