வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் ‘நாமும் சுற்றுச்சூழலும்’ மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் வீனஸ் வித்யாலயா பள்ளியில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் தலைமை தாங்கினார். நகராட்சி சுகாதார ஆய்வாளர் இராமலிங்கம் முன்னிலை வகித்தார். பள்ளி ஆசிரியை ஷாகிதா வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக, நகராட்சி ஆணையர் சோனியா பங்கேற்று, சுற்றுச்சூழலை பாதுகாப்பது அனைவரது கடமை ஆகும். மேலும் மாணவர்களாகிய நீங்கள் முன்னோடிகளாக திகழ வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று அறிவுறுத்தினார். வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு வளப் படுத்தலாம் என்றும், மரக்கன்றுகளை நட்டு இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேச்சு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் ஆசிரியை மோனிகா நன்றி கூறினார்.