ரிஷிவந்தியம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் தியாகதுருகம் மற்றும் கள்ளக்குறிச்சிக்கு செல்கின்றனர்.
இதில், ரிஷிவந்தியத்தில் இருந்து வனப்பகுதி வழியாக மில்கேட் பகுதி வரை செல்லும் தார்சாலையில் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. சில இடங்களில் உள்ள பெரிய பள்ளங்களால் இரவு நேரத்தில் பைக்குகளில் வேகமாக செல்பவர்கள் பள்ளத்தில் சிக்கி, நிலைதடுமாறி கீழே விழுகின்றனர். அதேபோல், ரிஷிவந்தியத்தில் இருந்து கெடிலம் கூட்டுரோடு வரை செல்லும் சாலையும் மோசமாக உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் சாலையில் உள்ள பள்ளங்களை சரிசெய்திட நெடுஞ்சாலைத்துறை சார்பில் ‘பேட்ச்’ வொர்க் நடந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.பள்ளங்களை தற்காலிகமாக சரிசெய்யும் நோக்கில், ‘பேட்ச்’ வொர்க் செய்திடாமல், தார்சாலையை புதுப்பிக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.