தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் அப்பாவு தலைமை தாங்கினார்.
பொருளாளர் பால்ராஜ், துணை செயலாளர் ரீதா முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் ராமசாமி, மாநில நிர்வாக குழு உறுப்பினர் வளர்மதி, மாவட்ட தலைவர் முருகேசன், பொருளாளர் கோவிந்தராஜ், வங்கி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம், மாவட்டக்குழு உறுப்பினர் ராஜி ஆகியோர் கோரிக்கை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், தேசிய ஊரக வேலை திட்டத்தில் அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர்களுக்கு நலவாரியம் மீண்டும் அமல்படுத்த வேண்டும். உழவர் பாதுகாப்பு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.