
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகரில் உள்ள பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்தவாசி நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது.அதன்பேரில், கடை வீதி, சீதாராம நாயுடு தெரு, காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகை, காய்கறி கடைகள் மற்றும் நெகிழிப் பொருள்கள் விற்பனை கடைகளில் மாசு கட்டுப்பாடு வாரிய உதவிப் பொறியாளர் க. பிரேம்குமார், நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ். ராமலிங்கம் மற்றும் களப் பணியாளர்கள் நேற்று சோதனை மேற்கொண்டனர். இதில், ஒரு கடையிலிருந்து 150 கிலோ நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.