சென்னையிலிருந்து கன்னியாகுமரி சென்ற ஆம்னி பேருந்து, கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே சென்றபோது சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு சென்று உயிரிழந்தவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.