
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நேற்று (டிசம்பர் 21) அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.