திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சட்டமன்றத் தொகுதி, எட்டிவாடி கிராமத்தில் புத்தாண்டை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் நடத்தும் முதலாம் ஆண்டு மாபெரும் கன்றுவிடும் திருவிழாவில், போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி மற்றும் திருவண்ணாமலை மத்திய மாவட்ட கழக செயலாளர் எல். ஜெயசுதா லட்சுமிகாந்தன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு விழாவினை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
உடன், ராஜன் பொதுக்குழு உறுப்பினர், கே.கார்த்திகேயன் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர், பாண்டுரங்கன் நகர கழக செயலாளர், இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளர் இ. செந்தில்குமார், ஒன்றிய கழக செயலாளர் பி. ராகவன், இ. ஸ்ரீதர், அல்லி நகர் சங்கர், மற்றும் அம்பிகா முருகன் பேரூராட்சி உறுப்பினர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.