
தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் கவர்னரை கண்டித்தும், மத்திய அரசு மீதுள்ள மக்களின் கோபத்தை திசைமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதிய ஜனதாவை கண்டித்தும் கடலூர் கிழக்கு மாவட்ட தி. மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் திமுகவினர் கலந்து கொள்ள வேண்டும் என குறிஞ்சிப்பாடி அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.