
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட, சாத்தனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் சிறப்பு முகாமில் நடைபெற்று வரும் பணிகளை திமுக மத்திய ஒன்றிய கழக செயலாளர் கோ. இரமேஷ் அவர்கள் ஆய்வு செய்தார். உடன் கழக நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.